கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்

பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா பங்கேற்பு
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்
x
கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆபத்தா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் 'ஆபரேஷன் தாமரை' என்ற நடவடிக்கையை, எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா தொடங்கி இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. ஆனால், ஆட்சியை கவிழ்க்க முடியாது என, குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எடியூரப்பா உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, முதலமைச்சர் குமாரசாமி தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவதாகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதாக எழுந்த புகாரில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்