"குடிசைகளற்ற சென்னை மாநகரை உருவாக்க திட்டம்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
குடிசை பகுதி இல்லாத சென்னை மாநகரை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
குடிசை பகுதி இல்லாத சென்னை மாநகரை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய அவர், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட பங்கஜம் தெரு, ஒசான்குளம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளை குடிசை மாற்று வாரியம் பராமரித்து வருவதாகவும், ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். உலக வங்கியின் நிதிஉதவியை பெற்று சென்னையில் குடிசைப்பகுதிகளை அகற்றி புதிய குடியிருப்புகளை கட்டும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story