திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா..? - நடிகர் கமலின் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் இன்று முடிவெடுக்கிறது.
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா..? - நடிகர் கமலின் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு
x
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் இன்று முடிவெடுக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம், கடந்த மாதம் 22-ந்தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில், அதே இடத்தில், 2வது கூட்டம் இன்று நடைபெறுகிறது. திருவாரூர் இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? கூட்டணி அமைப்பதா? அல்லது வேட்பாளர்களை நிறுத்தாமல் பிற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்