"நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி பணிகள் " - பிரதமர் மோடி பெருமிதம்

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி பணிகளை எடுத்து செல்லப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி பணிகள்  - பிரதமர் மோடி பெருமிதம்
x
அந்தமான் தீவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அவர், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, மீனவர்களுக்கு உதவும் வகையில் ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டார். அந்தமான் தீவில் 7 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உற்பத்தி நிலையத்தை திறந்து வைக்க உள்ள அவர், நாட்டு மக்களிடையே சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அந்தமான் நிக்கோபார் தீவு இந்திய பெருங்கடலில் இருக்கும் கலாச்சார பொக்கிஷம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்