கடத்தல் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் ஒரு கருவி மட்டுமே - பாண்டியராஜன்

சென்னை ஆர்.ஏ. புரத்தில் உள்ள தமிழ்நாடு குச்சிப்புடி அகடெமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
x
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், கடந்த ஆண்டு உலக இசை நகரம் என சென்னையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. அதை தக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க பூர்வாங்க பணி நிறைவடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். கடத்தல் சிலைகள் மீட்கப்பட்டதற்கு அரசு தான் காரணம் என்றும், பொன் மாணிக்கவேல் ஒரு கருவி மட்டுமே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்