ஓ.பி.எஸ். சகோதரர் ராஜா நீக்கமும்... சேர்ப்பும் : அதிமுகவில் நடந்தது என்ன...?

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
x
மதுரை மற்றும் தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் பதவிக்கு துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிகப்படியான வாக்குகளை பெற்ற ஒ.ராஜா முறைப்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மதுரை ஆவின் அலுவலகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் ஒ.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்து.


அன்று மாலையே, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜா நீக்கப்படுவதாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர். 

அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தம்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது  அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் ஓ.ராஜாவை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வதாக அதிமுக தலைமை நேற்று அறிவித்தது. 

தனது செயலுக்கு நேரிலும், கடிதம் மூலமும் ஓ.ராஜா வருத்தம் தெரிவித்ததாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்