அதிமுகவில் ஐவர் குழு : மேலிடம் அறிவிப்பு
அதிமுகவில், ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட புகார்களை விசாரித்து, மேலிடத்திற்கு பரிந்துரை செய்ய, ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
* அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
* இதன்படி, கே.பி. முனுசாமி, ஆர். வைத்தியலிங்கம், நத்தம் விசுவநாதன், அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
* இவர்கள் 5 பேருக்கும் அதிமுக தொண்டர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு, அறிக்கையொன்றில் ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story