ஓ. ராஜாவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணி எ​ன்ன..?

ஓ. ராஜாவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணி எ​ன்ன என்பதை விளக்குகிறது
x
* அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் 4 சகோதரர்களில் ஒருவர் ஓ.ராஜா.  

* ஆரம்ப காலங்களில் TTV தினகரனுடன் நெருக்கமாக வலம்வந்தார். பன்னீர்செல்வத்தின் செல்வாக்கால் 2011 முதல் 2016  வரை பெரியகுளம் நகரமன்ற தலைவராக பதவி வகித்தார்.

* இவர் மீது ஏற்கனவே நிறைய புகார்கள் உள்ளன. கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 

* கைது செய்யப்பட்டு விசாரணைக்கும் உள்ளானவர். இந்த வழக்கால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால், கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

* தற்போது சவுடு மணல் எடுப்பதாகக் கூறி ஆற்று மணல் கடத்தியதாக 2 வழக்குகளும், ஆவின் சேர்மேனாக தேர்ந்தெடுக்க தடைகோரிய வழக்கும் நிலுவையில் உள்ளன.

* அதிமுக அமைச்சரவையில் பன்னீர்செல்வம் இருக்கும்போதெல்லாம், சொந்த தொகுதியில், ராஜாவின் கை ஓங்கியிருந்தது, 

* கட்சியினரிடையே, அதிருப்தியை ஏற்படுத்தியதாம். இதன் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி பலர் தினகரன் பக்கம் சென்றதாகவும் கூறப்படுகிறது.

* இதனால்தான், வேறு வழியின்றி கட்சி மேலிடம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்ததாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்