ஒரு படம் தோற்றால் ரஜினி தோற்றதாக அர்த்தமா...? : பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டி

தமிழக பாஜக-வினருடன் காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
ஒரு படம் தோற்றால் ரஜினி தோற்றதாக அர்த்தமா...? : பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டி
x
தமிழகத்தில் உள்ள நாமக்கல், சேலம், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி ஊழியர்களுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்த தகவலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சவுந்தரராஜன் கூறினார்.  பாஜக குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து பற்றி கேட்டபோது, ஒரு படம்  தோற்று விட்டால் ரஜினி தோற்று விட்டார் என பொருளல்ல என தமிழிசை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்