இந்துக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தான் பாஜகவுக்கு பின்னடைவு - அர்ஜூன் சம்பத்

புதுச்சேரியில் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே மதுபானக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கும் மாநில அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
x
புதுச்சேரியில் கோவில்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே மதுபானக்கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கும் மாநில அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருவடிக்குப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், இந்துக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றாததால் தான் 5 மாநில தேர்தலில் பாஜக தோல்விடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்