யார் தலைவர்? திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து மோதல்
பதிவு : டிசம்பர் 08, 2018, 08:03 PM
யார் தலைவர்? திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து மோதல்
ஈ.வி. கே.எஸ் இளங்கோவனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காது என்று அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். டெல்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அவர் இந்த கருத்தை தெரிவித்தார். பின்னர், தலைநகர் டெல்லியில், சோனியாகாந்தியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய போது, கட்சி பணியை பார்ப்பதே தனது வேலை என்றும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்தோஷப்படுத்துவது தனது வேலை கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

தலைவராக வர முடியாது என திருநாவுக்கரசர் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளிக்க, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி. கே. எஸ். இளங்கோவன் திட்டவட்டமாக மறுத்து விட்டார். புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் வேலையை தாம் பார்த்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். தலைமை அனுமதித்தால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என்றும்
ஈ.வி. கே. எஸ். இளங்கோவன்  தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

காங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை

104 views

பாஜகவை முதலில் வீழ்த்துவதே இலக்கு - ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதே, எதிர்க்கட்சிகளின் இலக்கு என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

668 views

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

தோல்வி தான் வெற்றி எனும் காங்கிரசின் புதிய விளக்கம் 2019 வரை தொடரும் - அமித்ஷா கிண்டல்

128 views

பிற செய்திகள்

அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் : பரிசுகள் வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளையொட்டி, கரூர் மாவட்ட அதிமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

17 views

ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன்

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

8 views

புதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

19 views

நேரிடையாக மோத முடியாததால் மறைமுக தாக்குதல் : புல்வாமா தாக்குதல் குறித்து ஹெச்.ராஜா கருத்து

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

20 views

30,000 முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் : உடனடியாக வெளியிட ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள 150 பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

45 views

பிரதமர் மோடிக்கு எதிராக அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் - வைகோ

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.