அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ்
பதிவு : டிசம்பர் 06, 2018, 04:37 PM
விதிமீறல் புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதுபோல, மதுரையில்  'சர்கார்' பட திரையரங்கு முன் போராட்டம் நடத்தியதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக ராஜன் செல்லப்பா மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக எம்எல்ஏ  ராஜன் செல்லப்பா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 

பிற செய்திகள்

அ.தி.மு.கவுடன் தே.மு.தி.க. இணைவதில் சிக்கல் - இரட்டை இலக்க தொகுதிகளை கேட்பதால் இழுபறி

பா.ம.க-வுக்கு இணையான தொகுதிகளை பெற முயற்சிப்பதால், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.திக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

164 views

தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் முறையீடு...

பனங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் தங்கள் குழந்தையுடன் பள்ளியில் இருந்து வெளியேறினர்.

124 views

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு "மகாலட்சுமி" என பெயர் சூடல்...

எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட பெண் பெற்றெடுத்த குழந்தையின் எடை ஒரு கிலோ கூடியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

66 views

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை - இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

74 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.