பா.ஜ.க. மகளிரணி செயலாளர் காருக்கு தீவைப்பு

பா.ஜ.க. மகளிரணி செயலாளர் மகாலட்சுமி வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் மீது அதிகாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
பா.ஜ.க. மகளிரணி செயலாளர் காருக்கு தீவைப்பு
x
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள திருமகள் நகரில் வசித்து வரும் பா.ஜ.க. மகளிரணி செயலாளர் மகாலட்சுமி வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டு இருந்த அவரது கார் மீது அதிகாலை 4 மணிக்கு மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்து மகாலட்சுமி, அங்கிருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் அருகே மர்மநபர்கள் விட்டுச்சென்ற பொருட்கள் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Next Story

மேலும் செய்திகள்