மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை - தமிழிசை
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டினால் தமிழக பாஜக எதிர்க்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை - தியாகராய நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் " மக்கள் சந்திப்பு" என்ற நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக அரசுக்கு அணை கட்ட அனுமதி கொடுக்கவில்லை - ஆய்வு செய்ய மட்டுமே ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்தார்.
Next Story