தேர்தல் வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சர் பாண்டியராஜனின் மனு தள்ளுபடி
தம்மீதான தேர்தல் வழக்கு ரத்து செய்யக் கோரிய அமைச்சர் பாண்டியராஜனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2016 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவை சேர்ந்த நாசர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பாண்டியராஜன் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரித்த நீதிபதி முரளிதரன், தேர்தல் வழக்கில் ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாகக் கூறி அமைச்சர் பாண்டியராஜனின் மனுவை தள்ளுபடி செய்தார். அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story