11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நவ. 15 - க்கு ஒத்திவைத்தது - உச்சநீதிமன்றம்

நெடுஞ்சாலை டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ள நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் முக்கியமான வழக்கை உச்சநீதிமன்றம் நவம்பர் 15 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : நவ. 15 - க்கு ஒத்திவைத்தது -  உச்சநீதிமன்றம்
x
திமுக கொறடா சக்ரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ. பன்னீர் செல்வம் தரப்பின் கால அவகாச கோரிக்கையை ஏற்று நவம்பர் 15 ம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் பிளவு வெடித்து சட்டப்பேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 
ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.`

Next Story

மேலும் செய்திகள்