என்.ஆர். காங். எம்.எல்.ஏவுக்கு ஓராண்டு சிறை : புதுவை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்து வழக்கில், என். ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்துக்கு, புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது.
என்.ஆர். காங். எம்.எல்.ஏவுக்கு ஓராண்டு சிறை : புதுவை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
x
சொத்து வழக்கில், என். ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்துக்கு, புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளித்துள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அசோக் ஆனந்த் மீதும், அவரது தந்தை ஆனந்தன் மீதும் வருவாய்க்கு அதிகமாக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது. புதுச்சேரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தனபால், இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். மாலையில் தண்டனை விவரங்களை வெளியிட்ட நீதிபதி  , எம்.எல்ஏ அசோக் ஆனந்த்துக்கும், அவரது தந்தை ஆனந்தனுக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். இதுதவிர, ஒரு கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய சிபிஐ அதிகாரிகளுக்கு, நீதிபதி தனபால் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்