"டிஜிட்டலில் மாதம் ரூ. 250 கோடி பணப்பரிவர்த்தனை" - பிரதமர் நரேந்திரமோடிபெருமிதம்
மாதந்தோறும் 250 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை நடக்கும் அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா - இத்தாலி இடையிலான தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்து உள்ளது என்றார். கடந்த 4 ஆண்டுகளில் 1 ஜி.பி இணைய கட்டணம் 90 சதவீதம் குறைந்து விட்டதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இந்த மாநாட்டில், இரு நாட்டு, டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Next Story