18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்

அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. கொறடா கேவியட் மனுதாக்கல்
x
முதலமைச்சரை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அளித்த உத்தரவு செல்லும் என அண்மையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார். இந்தநிலையில், அ.தி.மு.க கொறடா எஸ்.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 18 பேர் மேல்முறையீடு செய்யும் நிலையில், உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்