கர்நாடகாவில், நவம்பர் 3ஆம் தேதிக்கு பின்னர், ஆட்சி கவிழும் - பா.ஜ.க. முன்னாள் முதலமைச்சர் பரபரப்பு பேச்சு

கர்நாடகாவில், நவம்பர் 3ஆம் தேதிக்கு பின்னர், ஆட்சி கவிழும் என, பா.ஜ.க. முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில், நவம்பர் 3ஆம் தேதிக்கு பின்னர், ஆட்சி கவிழும் - பா.ஜ.க. முன்னாள் முதலமைச்சர் பரபரப்பு பேச்சு
x
நவம்பர் மூன்றாம் தேதி கர்நாடகாவின் மூன்று மக்களவை தொகுதி மற்றும் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, பா.ஜ.க. முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ராம்நகரில்   பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் - மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி, நவம்பர் 3ஆம் தேதிக்கு பிறகு,  கவிழும் எனக் கூறினார். தற்போது, பா.ஜ.க.வில் 105 உறுப்பினர்கள் உள்ளனர். நவம்பர் மூன்றாம் தேதிக்கு பிறகு உறுப்பினர்களின் பலம் 113 ஆக இருக்கும் எனக் கூறியுள்ள அவர், 'அது எப்படி நடக்கிறது என்பதை விரைவில் பார்ப்பீர்கள்' என்றும் பேசியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்