இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு அதிமுக பொறுப்பாளர்கள் நியமனம்
x
இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்களாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைப்புச் செயலாளர் முருகுமாறன் உள்ளிட்ட 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* வடசென்னையில் பெரம்பூர் தொகுதிக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் மதுசூதனன், எம்.பி. விஜிலா சத்தியானந்த் உள்ளிட்ட 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* வேலூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்கு அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட 4 பேரும், 

* தஞ்சாவூர் தொகுதிக்கு அமைச்சர்கள் துரைக்கண்ணு, வளர்மதி, எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்ட 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்கு அமைச்சர்கள் அன்பழகன், சரோஜா, கருப்பணன், கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் உள்ளிட்ட 6 பேரும் , 

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 8 பேரும், 

* திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதிக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 5 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

* இதேபோல், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், பாஸ்கரன், கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா உள்ளிட்ட 5 பேர். 

* குடியாத்தம் தொகுதிக்கு அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

* தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  தொகுதிக்கு அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 6 பேரும், 

* காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் தொகுதிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சியின் செய்தி தொடர்பாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 9 பேரும்  நியமிக்கப்பட்டுள்ளனர். 

* விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதிக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, கட்சியின் அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட  செயலாளர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட 7 பேரும், 

* தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு அமைச்சர் அன்பழகன், அமைப்பு செயலாளர் செம்மலை உள்ளிட்ட 4 பேரும்,  

* வேலூர் மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்கு அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாலகிருஷ்ணாரெட்டி உள்ளிட்ட 5 பேரும், 

* திருவாரூர் தொகுதிக்கு அமைச்சர் காமராஜ், அமைப்பு செயலாளர் கோபால் உள்ளிட்ட 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதிக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், மணிகண்டன், சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் அன்வர் ராஜா உள்ளிட்ட 5 பேரும், 

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி உள்ளிட்ட 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

* திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு அமைச்சர்கள் பென்ஜமின், மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற குழுத் தலைவர் வேணுகோபால், அமைப்பு செயலாளர் மைத்ரேயன் உள்ளிட்ட 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்