பெரம்பூர் தொகுதியில் அதிமுக தேர்தல் பணி

சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிவேல் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் அதிமுக தேர்தல் பணி
x
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் தகுதி நீக்க உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது அந்தத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்நிலையில், பெரம்பூர் தொகுதியை கைப்பற்றும் முயற்சியில் அதிமுகவினர்  இறங்கியுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தொகுதியில் பெரும்பாலான இடங்களில் சுவர் விளம்பரம் வரைவதிலும், போஸ்டர்கள் ஒட்டுவதிலும் அதிமுகவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்