களை கட்டும் மத்திய பிரதேச தேர்தல் - மார்ஃபிங் வீடியோ வெளியிட்டு தேர்தல் பிரசாரம்

மத்திய பிரதேச மாநிலத்தில், மார்ஃபிங் வீடியோ தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு
களை கட்டும் மத்திய பிரதேச தேர்தல் - மார்ஃபிங் வீடியோ வெளியிட்டு தேர்தல் பிரசாரம்
x
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை, பாகுபலியாக உருவகப்படுத்தி, பா.ஜ.க. வெளியிட்ட வீடியோ, அந்தக் கட்சிக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது. அனைவராலும் ரசித்துப் பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் மூத்த தலைவரான கமல்நாத், ஜோதிராதித்யாவின் வளர்ச்சியை பொறுக்காமல், கட்டப்பா போல், முதுகில் குத்திக் கொல்பவராகவும் இந்த வீடியோ சித்தரித்துள்ளது. இந்த வீடியோ கடந்த மாதம் வெளியானாலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் சும்மா இருப்பார்களா... பதிலுக்கு 'சிங்கம்' படத்தை பயன்படுத்தி, கமல்நாத்தை களமிறக்கி விட்டுள்ளனர்.பாகுபலி அளவுக்கு சிவ்ராஜ் சிங் சவுகான் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, சிங்கமாக கமல்நாத் சீறப் போகிறாரோ இல்லையோ... இந்த மார்ஃபிங் வீடியோக்கள் மத்திய பிரதேசத்தை கலக்கி வருகிறது... 


Next Story

மேலும் செய்திகள்