ரஜினியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கிய கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்

மன்னிப்பு கடிதம் வழங்கிய கடலூர் மாவட்ட ரசிகர்கள் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
ரஜினியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கிய கடலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்
x
கடந்த மாதம் ரஜினி மக்கள் மன்ற கட்டுப்பாட்டை மீறியதாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர்  நிரந்தரமாக நீக்கப்பட்டனர். இதனையடுத்து ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரசிகர் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பதினைந்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரஜினியிடம் மன்னிப்பு கேட்பதற்காக சென்னை வந்தனர். ரஜினி மக்கள் மன்றம் தலைமை அலுவலகத்தில் மன்னிப்பு கடிதத்தை அவர்கள் வழங்கினார்கள்.தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் ரஜினியை அவர்கள் சந்தித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்