"ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மீதுதான் ஆசை" - எடப்பாடி பழனிசாமி

கோவை அருகே ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மீதுதான் ஆசை - எடப்பாடி பழனிசாமி
x
நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக, சிங்காநல்லூர், ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், குறிச்சி, சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார். சுந்தராபுரம் பகுதியில் பேசிய அவர், ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனக்கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாற்காலி மீதுதான் ஆசை எனக் குற்றம்சாட்டினார்.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்