தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17எம்எல்ஏக்கள் தங்கும் இசக்கி சுப்பையா மற்றும் ஹைவியூ ரிசார்ட்- சிறு குறிப்பு

இசக்கி ஹைவியூ ரிசார்ட் நெல்லை மாவட்டம் பழையகுற்றாலம் சாலையில் அமைந்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17எம்எல்ஏக்கள் தங்கும் இசக்கி சுப்பையா மற்றும் ஹைவியூ ரிசார்ட்-  சிறு குறிப்பு
x
* தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் வெற்றிவேல் தவிர, எஞ்சிய 17 பேரும், நெல்லை மாவட்டம் குற்றாலம் புறப்பட்டு சென்றனர். 

* இவர்கள், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் ஹோட்டலில் தங்குகிறார்கள். ஹோட்டலுக்கு ஒவ்வொருவராக வந்துகொண்டுள்ளனர்.

* 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு, இந்த வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* இந்த 17 பேரும் தங்கும் இசக்கி ஹைவியூ ரிசார்ட் நெல்லை மாவட்டம் பழையகுற்றாலம் சாலையில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் இசக்கி சுப்பையா ஆவார்.

* இவர் தற்போது அமமுக மாநில அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இந்த விடுதியில் குடில்கள்,குளிர்சாதன அறைகள்,சூட் அறைகள் என 30 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இசக்கி சுப்பையா டிடிவி தினகரனின் நெருக்கத்திற்குரியவர்களில் ஒருவர். 

* இசக்கிசுப்பையாவின் இடத்தில் தான் அமமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இசக்கிசுப்பையாவின் மகனுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மகளை திருமணம் செய்துள்ளனர்.

* 18 தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் விடுதிக்கு வரவுள்ளதாக வந்த தகவலையடுத்து விடுதிக்கு கூடுதலாக தனியார் பாதுகாவலர்கள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், 4 எம்எல்ஏக்கள் வந்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்