"பரம்பிக்குளம்-ஆழியாறு விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு" - ஸ்டாலின்

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகளின் மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும் என திமுக தலைவல் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பரம்பிக்குளம்-ஆழியாறு விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு - ஸ்டாலின்
x
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விவசாயிகளின் மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு தி.மு.க ஆதரவளிக்கும் என திமுக தலைவல் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்கள்", அ.தி.மு.க அரசின் அலட்சியத்தால், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் இந்த "மாபெரும் எழுச்சிப்  பேரணி" தூங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க அரசை நிச்சயம் தட்டி எழுப்பும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்