முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 58.
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்
x
கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பரிதி இளம்வழுதி,  சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. கடந்த 1959-ம் ஆண்டு பிறந்த பரிதி இளம் வழுதி, திமுகவின் துணை பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார். 

6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், துணை சபாநாயகர், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவில் இருந்த விலகிய பரிதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக இருந்து வந்தார்.

Next Story

மேலும் செய்திகள்