"அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை விரைந்து நடத்துங்கள்" - ராஜா செந்தூர்பாண்டியன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு விரைந்து தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை விரைந்து நடத்துங்கள் - ராஜா செந்தூர்பாண்டியன்
x
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில், 4 வாரத்திற்குள் பதில் மனுத்தாக்கல் செய்ய சசிகலாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் சசிகலா தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடமும் சசிகலா தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூ​ர் பாண்டியன், ஜெயலலிதாவும் 5 ஆண்டுகளாக தற்காலிக பொதுச் செயலாளராக இருந்ததாகவும், 1993 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் தான் பொதுச் செயலாளராக பதவியேற்றதாகவும் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்