"செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாது" - அரசு தரப்பு சாட்சி சாட்சியம்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரியாது என சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சி சாட்சியம் அளித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாது - அரசு தரப்பு சாட்சி சாட்சியம்
x
கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. முன் அறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தார். இதற்கு அமைச்சர் உதயகுமார் தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து ஸ்டாலின் மீது அமைச்சர் உதயகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சியான வழக்கறிஞர் பரணிகுமார் என்பவர், சென்னையை  பலத்த மழை தாக்கப்போவது தொடர்பான தகவலை ஜெயலலிதாவிடம் தெரிவிக்காமல் அமைச்சர் உதயகுமார் மறைத்து விட்டதாக தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு தெரிந்திருந்தால் அவர் தகுந்த நடவடிக்கை எடுத்திருப்பார் என்​றும் அரசு தரப்பு சாட்சி கூறினார். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதற்கு அமைச்சர் உதயகுமாரே காரணம் என்றும் அவர் சாட்சியம் அளித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை  8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்