ஹெச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது - எஸ்.வி.சேகர்

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, நீதிமன்றத்தையும், போலீஸாரையும் அவமதித்து பேசியதாகக் கூறப்படும் வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்தார்
ஹெச்.ராஜா வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது - எஸ்.வி.சேகர்
x
நடிகர் சிவாஜியின் 91வது பிறந்த நாளையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, நீதிமன்றத்தையும், போலீஸாரையும் அவமதித்து பேசியதாகக் கூறப்படும்  வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றார். இதனை தடயவியல் துறைதான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்