பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து : முன்னாள் காங். எம்.பி. யான நடிகை ரம்யா மீது வழக்கு

பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்டதாக நடிகை ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து : முன்னாள் காங். எம்.பி. யான நடிகை ரம்யா மீது வழக்கு
x
பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்டதாக நடிகை ரம்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் 'குத்து' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா, கர்நாடக மாநிலத்தில் முக்கிய காங்கிரஸ் பிரமுகராகவும் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். முன்னாள் எம்.பியான இவர், தனது டுவீட் பதிவில், பிரதமர் மோடி குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பாக, லக்னோவை சேர்ந்த ரிஸ்வான் அகமது என்ற வழக்கறிஞர் புகார் மனு  அளித்திருந்தார். அதன்பேரில், ரம்யா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்