கருணாஸை கைது செய்ய வேண்டும் - எம்.எல்.ஏ.கனகராஜ்

கருணாஸை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கருணாஸை கைது செய்ய வேண்டும் - எம்.எல்.ஏ.கனகராஜ்
x
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, வெற்றி பெறவைத்த அதிமுகவுக்கு கருணாஸ் அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில், நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில், புதுப்பிக்கப்பட்ட கோ ஆப்டெக்ஸ் துவக்க விழாவில், அமைச்சர் வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், அம்மன் அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. கனகராஜ், சாதி குறித்த பேச்சுக்காக, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்