எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் துவங்கி உள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை
x
துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தற்போது, தமிழகத்தில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்