ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா' விருது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

கடந்த 9ம் தேதியன்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
x
தமிழகத்தின் முதலமைச்சராக 15 ஆண்டு காலம் பதவி வகித்துள்ள ஜெயலலிதா கடந்த 2011, 2014 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர் வெற்றியை பெற்றவர் எனவும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, கடந்த 9ம் தேதியன்று தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுபோல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் இது தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்குமாறும் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிச்சாமி வலியுறுத்தி இருக்கிறார். மற்றொரு கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் எனவும் பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்