முதலமைச்சருக்கு எதிரான திமுக புகார் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன ? - விரிவான அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

முதலமைச்சருக்கு எதிரான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சருக்கு எதிரான திமுக புகார் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன ? - விரிவான அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
x
நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக தி.மு.கவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், புகார் மீதான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்தார். அப்போது, திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நியாயமாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்  என வலியுறுத்தினார். 

இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, புகார் மீது அன்றாடம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை சீல் வைக்கப்பட்ட கவரில் வரும் 17ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்