18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து

10 சதவீத மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தவறு எனவும் வாதிட்டார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து
x
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், அனைத்து தரப்பு வாதங்காலும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார், மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன்.முதல்வர் மீது நம்பிக்கையில்லை எனவும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆளுநரிடம் கடிதம் அளித்ததன் மூலம், கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார் சபாநாயகர்.இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்திருந்தனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணன், கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணையை துவங்கினார். 12 நாட்களாக நடந்த விசாரணை இன்றுடன் முடிவடைந்து, வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான இன்று, சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், தகுதி நீக்க உத்தரவு அவசரகதியில் பிறப்பிக்கப் படவில்லை என்றும் சட்டம் மற்றும் இயற்கை நியதிக்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவது என்பது கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டதாக கருதி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டார்.வேறு கட்சிக்கு மாறினால் மட்டுமல்லாமல், கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவது, பேசுவதும் கூட கட்சித் தாவலாக கருதி தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் வாதிட்டார்.18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தன் பதில் வாதத்தில், எந்தவித ஆதாரங்களும் இன்றி தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கட்சித்தாவல் ஆகாது எனவு. குறிப்பிட்டார்.கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுவது, கருத்து தெரிவிப்பது, கட்சிக்கு எதிரானது என்றும், ஆட்சிக்கு எதிரானது என்றும் கருதி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்தால் அது பேராபத்தாக இருக்கும் எனவும், இது கட்சித்தலைமைக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலையை ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.10 சதவீத மக்களை பிரதிநித்துவப்படுத்தும் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு தவறு எனவும் வாதிட்டார்.கடந்த 12 நாட்களாக நடந்த வாதங்கள் இன்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி சத்தியநாராயணன், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.




Next Story

மேலும் செய்திகள்