கர்நாடகாவில் ஆட்சியமைத்து 100 நாள் நிறைவு : ராகுல் காந்தியை சந்தித்தார் குமாரசாமி
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவோடு அமைந்துள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவிக்கு வந்து இன்றுடன் 100 நாள் நிறைவடைகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவோடு அமைந்துள்ள மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவிக்கு வந்து இன்றுடன் 100 நாள் நிறைவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்த நன்றி தெரிவித்தார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி தன்னுடைய அரசு வெற்றிகரமாக செயல்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அரசுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.
Next Story