நான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்த தருணம் - மனம் திறந்த கனிமொழி...

என் தலைவனுக்கு இடமில்லை, என் தந்தைக்கு இடமில்லை என்று ஸ்டாலின் கோபப்படவில்லை - கனிமொழி
நான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்த தருணம் - மனம் திறந்த கனிமொழி...
x
திமுக தலைவராக ஸ்டாலின், போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கட்சியின், பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் முதல்முறையாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுகவின் 65 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேடையில் அமர்ந்திருந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, திமுக தலைவராக, செயல் தலைவர் ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக, அறிவித்தார். அப்போது, திமுகவினர் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும்  வரவேற்றனர். 

நான் ஸ்டாலினை தலைவராக உணர்ந்த தருணம் - மனம் திறந்த கனிமொழி...

கருணாநிதியை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் கிடைக்காத போது, ஸ்டாலின் நடந்து கொண்ட விதம், அவரை தலைவராக காட்டியதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்