தயாநிதி மாறனிடம் நிதி கேட்ட துரைமுருகன்

பொருளாளர் பதவியேற்ற துரைமுருகனின் நகைச்சுவை பேச்சால் சிரிப்பலை
தயாநிதி மாறனிடம் நிதி கேட்ட துரைமுருகன்
x
* "என் மரியாதைக்குரிய தலைவர் மு.க.ஸ்டாலின்" என தனது உரையை தொடங்கிய துரைமுருகன், "என் கண் முன்னால் வளர்ந்து,என் தோளுக்கு வந்து தோழனாகி,என் தலைக்கு மேல் வளர்ந்து தலைவனாகிவிட்டார்" என ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

* தொடர்ந்து பேசிய அவர், இந்த பொதுக்குழு கூட்டம் எனக்கும், தலைவருக்கும் ஒரு புதிய பொறுப்பை தலையில் சுமர்த்தியுள்ளது என பேசினார். 

* முன்னதாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஸ்டாலின் வகித்த பொருளாளர் பொறுப்பை ஏற்கும் துரைமுருகன் ஓடி ஓடி உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

* அதற்கு தன் வழக்கமான பாணியில் பதிலளித்த துரைமுருகன், தயாநிதி மாறனிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்தார். திராவிட இயக்கத்திற்காக உங்களிடம் மடியேந்தி வருகிறேன் என நகைச்சுவையோடு அவர் பேசிய பேச்சால், அரங்கம் முழுவதும் சிரிப்பலையால் அதிர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்