இன்று கூடுகிறது, திமுக பொதுக்குழு

திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.
இன்று கூடுகிறது, திமுக பொதுக்குழு
x
ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு, சென்னையில் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. திமுக தலைவராக . ஸ்டாலினும், 
பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 
இருந்தபோதிலும், இன்று நடைபெறும் திமுக பொதுக்குழுவில்  பொதுச்செயலாளர் அன்பழகன் அதிகாரப்பூர்வமாக இதை வெளியிடுவார் என்று தேர்தல் அலுவலரும் அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்