அதிமுக வழக்கு : செப் .13 வரை கே.சி. பழனிசாமியின் புகார் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம்

அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்த கே.சி. பழனிசாமி வழக்கு : செப் .13 வரை கே.சி. பழனிசாமியின் புகார் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம்
அதிமுக வழக்கு : செப் .13 வரை கே.சி. பழனிசாமியின் புகார் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம்
x
அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, முன்னாள் எம்.பி.., கே.சி.பழனிசாமி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை இல்லை என கூறி, அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வார காலத்துக்குள் முடிவெடுக்க, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து, முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,  தனி நீதிபதி  உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், கே.சி. பழனிசாமி மனு மீது செப்டம்பர் 13ஆம் தேதி வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்