ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக அவசர செயற்குழுகூட்டம்

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக செயற்குழு அவசர கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக அவசர செயற்குழுகூட்டம்
x
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு செயற்குழு கூட்டம் துவங்குகிறது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன்,ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்