ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணி வைக்குமா ? -தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பிரதமர் மோடி பதில்

பிரதமர் என்ற அடிப்படையில் மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை தன்னால் மதிப்பிட முடியாது என்றும் அந்தந்த மாநில மக்கள் தான் அதனை செய்ய வேண்டும் என்றும் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஜினி கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணி வைக்குமா ? -தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பிரதமர் மோடி பதில்
x
பிரதமர் என்ற அடிப்படையில் மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை தன்னால் மதிப்பிட முடியாது என்றும் அந்தந்த மாநில மக்கள் தான் அதனை செய்ய வேண்டும் என்றும் தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

* பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் தமிழக விவசாயிகள் தான் அதிகம் பயன் அடைந்துள்ளதாக அந்த பேட்டியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

* பாஜக ஆட்சியில், திருப்பூரில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

* ரஜினி கட்சி தொடங்கினால் அவருடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு, ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை என்பதால், யூகங்கள் அடிப்படையிலான கேள்விக்கு தன்னால் பதில் அளிக்க முடியாது என்று மோடி தெரிவித்துள்ளார். 

* எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளதாகவும், அவர்களிடம் ஆக்கப்பூர்வமான திட்டம் எதுவும் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ள பிரதமர் மோடி, தன்னை நீக்க வேண்டும் என்பது மட்டும் தான் அவர்களின் ஒரே நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

* தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை நிறைவேற்றுவது, தமது தலைமையிலான அரசின் நடைமுறை இல்லை என்றும், வருங்கால தலைமுறையினரை மனதில் வைத்தே திட்டங்களை தீட்டுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

* ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ஒரு பிரதமர் என்ற அடிப்படையில், மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை தன்னால் மதிப்பிட முடியாது என்றும், அந்தந்த மாநில மக்கள் தான் அதனை செய்ய வேண்டும் எனவும் மோடி பதில் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்