கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் - பிரதமர் நரேந்திர மோடி
கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்திய குடிமகனும் நாட்டை விட்டு வெளியேறும் நிலை வராது என்றார். கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை எனற பிரச்சாரத்துக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் அவர் கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அடித்துக் கொலை செய்வது போன்ற பிரச்சினைகளில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் செயல்பட முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் நம்பிக்கையை இழந்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு என திட்டவட்டமாக பிரதமர் மறுத்தார். அண்மையில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும், மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலும் அதற்கு சாட்சி என்றும் விளக்கமளித்தார். தற்போது தங்கள் கூட்டணியில் இல்லாத கட்சிகளும் தங்களுக்கு ஆதரவளித்து வருகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மக்களவையில் ராகுல்காந்தி தம்மை கட்டித் தழுவிய செயல் குழந்தைத்தனமானதா? இல்லையா? என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும், முடிவெடுக்க முடியாத நிலையில், அவர் கண் சிமிட்டியதை பார்த்தாலே பதில் கிடைக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Next Story

