கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

திமுக தொண்டர்களின் துணையோடு, கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
x
* இதையும் தாங்க ஏது தலைவா எமக்கு இதயம் என்ற தலைப்பில், திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எந்த குரலை கேட்டால், நாடி நரம்பு, எலும்பு, ரத்தம் எல்லாம் புத்துணர்வு பெறுமோ, அந்த குரலை இனி கேட்க முடியாது என வேதனை தெரிவித்துள்ளார். 

* எவ்வழி நல்வழி என்று, நாளெல்லாம் வழிகாட்டிய கலங்கரை விளக்கத்தூண் சாய்ந்து விட்டது என்று, அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டாலின் என்றால், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று மும்முறை கருணாநிதி சொன்னது தான் தமக்கு கிடைத்த மாபெரும் பாராட்டு பட்டயம் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

* திமுக தொண்டர்களின் துணையோடு, கருணாநிதியின் கனவுகளை சாதித்து காட்டுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருணாநிதி காட்டிய வழியில் தமது பயணம் தொடரும் என்று அறிவித்துள்ள ஸ்டாலின், இதுவரை உடலால் இயக்கியவர் இனி உணர்வால் இயக்குவார் என்று கருணாநிதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்