திமுக தலைவர் கருணாநிதி இறப்பு : தலைவர்கள் இரங்கல்

கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று (07.08.2018) மாலை 6.10 மணியளவில் பிரிந்தது.
திமுக தலைவர் கருணாநிதி இறப்பு : தலைவர்கள் இரங்கல்
x
திமுக தலைவர் கருணாநிதி காலமானதையடுத்து, தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* கருணாநிதியின் மறைவை அறிந்து வேதனை அடைந்தேன்; எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும், கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

* திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை காலை சென்னை வருகிறார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு காங். தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

*அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

*திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

*திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

*மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணனும் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்