கலைஞர் கருணாநிதி பிறக்கும் போதே ஒரு போராளி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
கலைஞர் கருணாநிதி பிறக்கும் போதே ஒரு போராளி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
x
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். ஸ்டாலினையும், கனிமொழியையும் சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், கலைஞர் கருணாநிதி, பிறக்கும் போதே ஒரு போராளி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருடைய வாழ்நாளில், பல போராட்டங்களை நடத்தியுள்ளார். தற்போதும் அவருடைய மன உறுதி தான் வெற்றி பெற்றுள்ளது. அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்