கருணாநிதியின் சொத்து விவரம் என்ன? - மார்கண்டேய கட்ஜூவின் பதிவால் சர்ச்சை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து மார்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளானது.
கருணாநிதியின் சொத்து விவரம் என்ன? - மார்கண்டேய கட்ஜூவின் பதிவால் சர்ச்சை
x
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, சமூக வலைத்தளத்தில், கருணாநிதி மீது தமிழர்கள் மிகவும் பரிதாபப்படுவதாகவும், ஆனால் அரசியலுக்கு வரும் முன் கருணாநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது கருணாநிதி மற்றும் அவரது உறவினர்களின் சொத்து மதிப்பு என்ன என்றும், காமராஜர் உயிரிழந்தபோது அவரிடம் எதுவுமே இல்லை எனவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி குறித்த கட்ஜுவின் இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் தற்போது விவாத பொருளாகி வருகிறது. 


ஜெயலலிதா குறித்த கட்ஜூவின் கருத்து - மீண்டும் நினைவு கூறும் நெட்டிசன்கள்

முன்னதாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சமூக வலைதளத்தில் மார்கண்டேய கட்ஜு கருத்து பதிவிட்டார். அதில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜெயலலிதா பெண் சிங்கம் போன்றவர் என்றும், தடைகளை தகர்த்து அவர் மீண்டு வருவார் எனவும் சமூக வலைத்தளத்தில் கட்ஜு கூறியிருந்தார். 
இந்நிலையில், தற்போது கருணாநிதி பற்றிய அவரது கருத்து மற்றும் ஜெயலலிதா பற்றிய கட்ஜுவின் முந்தைய கருத்து ஆகியவற்றை முன்வைத்து, சமூக வலைதளங்களில் ஏராளமானோர் விவாதம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்க​து. 



Next Story

மேலும் செய்திகள்