கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை

சீராகி வருகிறது கருணாநிதியின் உடல் நிலை - காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை
கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை
x
கருணாநிதி உடல் நலம் : மருத்துவ அறிக்கை வெளியீடு

வயது மூப்பு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள உடல் நலிவுக்கு இன்னும் சிறிது காலம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் உள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போது, கருணாநிதியின் உடல் நிலை, நன்றாக தேறி வருவதாக மருத்துவ அறிக்கையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு, கடந்த 4 நாட்களாக டாக்டர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்த நிலையில், காவேரி மருத்துவமனை நிர்வாகம், இன்று மாலை 6.30 மணி அளவில், புதிய மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
 
இதன்படி, ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் முயற்சியால் அதில் இருந்து மீண்டு தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  29 ஆம் தேதி சுவாசிப்பதில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பின், கருணாநிதியின் உடல் நன்கு ஒத்துழைத்ததுடன், அவரது உடலின் முக்கிய உறுப்புகள் அனைத்தும் படிப்படியாக சீரடைந்தது என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வயது முதிர்ச்சி காரணமாக ஒட்டுமொத்த உடல்நலன், கல்லீரல் செயல்பாடு மற்றும் இரத்தம் தொடர்பான செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள நலிவுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இடைவிடாத மருத்துவ உதவியுடன் கருணாநிதியின் முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இயங்கி வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


மருத்துவ அறிக்கை விவரம்...




Next Story

மேலும் செய்திகள்